இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: அரசு நிகழ்ச்சிகள் ரத்து; ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

DIN

ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தால் இன்று ஒரு நாள் மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

மேலும், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

ஒடிசாவில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைப்பதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.   

விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்துக்கு ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்த நிலையில், முதல்வர் நவீன் பட்நாயக் இன்று காலை செல்கிறார். 

ஹெளராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின் பாலசோா் மாவட்டத்தில் தடம்புரண்டிருந்த பெங்களூரு-ஹெளரால் மீதும், நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுடனும் மோதி விபத்துக்குள்ளானது. 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்களின் விபத்து நேர்ந்தது.

விபத்துக்குள்ளான 2 பயணிகள் ரயில்களும் தமிழகத்தின் ரயில் நிலையங்கள் வழியாகச் செல்வதால், அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் பயணித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

ரயில்களில் பயணித்தவர்களின் விவரங்களை முன்பதிவு அடிப்படையில் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். எனினும் முன்பதிவு செய்யாமல் ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கையும் கண்டறிய அதிகாரிகள் முயன்று வருகின்றனர். 

விபத்து குறித்து பயணிகளின் குடும்பத்தினா், உறவினா்கள் தகவல் அறிய அவசர கட்டுப்பட்டு அறை அமைக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

உதவி எண்கள்:

சென்னை சென்ட்ரலுக்கு தொடர்புகொள்ள: 044-25330952, 044-25330953, 044-25354771.

மக்களுக்கு உதவுவதற்காக டிஜிபி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதற்கான தொடர்பு எண்கள்: 1070, 044-28593990, 9445869848.

அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர் (ஒடிசா): 91 6782262286 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் விதித்தது

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவிழாவில் மோதல்: இளைஞா் கைது

உடையாா்பாளையம் பகுதியில் பழைமையான அய்யனாா் கற்சிலை

பாஜகவில் இருந்து நீக்கியதால் கவலையில்லை: கே.எஸ்.ஈஸ்வரப்பா

SCROLL FOR NEXT