இந்தியா

ஒடிசா ரயில் விபத்து மனவேதனை அளிக்கிறது: மாயாவதி

3rd Jun 2023 12:21 PM

ADVERTISEMENT

 

ஒடிசாவில் ஏற்பட்ட கொடூரமான ரயில் விபத்து மனவேதனையை அளிக்கிறது என பாஜக தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேயுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

படிக்க: 2018 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? 

இதுதொடர்பாக அவர் மாயாவதி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். குடும்பத்தாரை இழந்து வாடும் உறவினர்களுக்கு கடவுள் வலிமையை அளிக்கட்டும். 

இந்த கொடூரமான விபத்துக்கு உயர்நிலைக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையையும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT