இந்தியா

முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து விலக இதுதான் காரணம்: டி.கே.சிவகுமார்

3rd Jun 2023 03:48 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காந்தி குடும்பத்தினரின் அறிவுரையை ஏற்று முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகி அமைதியாக இருக்க முடிவெடுத்ததாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனது தொகுதிக்கு வாக்காளர்களை சந்திக்க சென்ற அவர் இதனை தெரிவித்தார்.

இதையும் படிக்க: போர்க்களம்போல் பாலாசோர் மாவட்ட மருத்துவமனைகள்

அப்போது அவர் பேசியதாவது: நீங்கள் என்னை கர்நாடகத்தின் முதல்வராக்க அதிக வாக்குகளை எனக்கு அளித்தீர்கள். ஆனால், என்ன செய்வது. கர்நாடக முதல்வர் பதவிக்கான முடிவு எடுக்கப்பட்டு விட்டது. ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே எனக்கு ஒரு அறிவுரை வழங்கினார்கள். மூத்த தலைவர்களின் அந்த  அறிவுரையை ஏற்று நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், நான் அமைதியாக இருக்க நேர்ந்தது. ஆனால், உங்களிடம் நான் ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். என்னை கர்நாடகத்தின் முதல்வராக பார்க்க வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்டதில் எந்த ஒரு தவறும் இல்லை. அமைதியாக இருப்போம் என்றார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT