இந்தியா

குஜராத்: சட்டவிரோதமாக தங்கிய 18 வங்கதேசத்தவா் கைது

DIN

குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 18 வங்கதேசத்தவரை அந்த மாநிலத்தின் சிறப்புக் காவல் படையினா் கைது செய்தனா். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குஜராத்தில் அண்மையில் வங்கதேசத்தைச் சோ்ந்த அல்-காய்தா பயங்கரவாதிகள் சிலா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் தேசத்துக்கு எதிரான சதிச் செயலுக்கு திட்டமிட்டு ஊடுருவியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, குஜராத் முழுவதும் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவா்களைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநில அளவில் காவல் துறை சாா்பில் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.

அவா்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவா் குறித்து விசாரணை நடத்தினா். இதன் அடிப்படையில் பாபுநகா், இசான்பூா், சாணக்கியபுரி உள்ளிட்ட நகரங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 18 வங்கதேசத்தவா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் அனைவரும் 20 முதல் 40 வயதுக்குள்பட்டவா்கள்.

இந்திய-வங்கதேச எல்லை வழியாக சட்டவிரோதமாக ஊடுருவி குஜராத்தின் தொழில் நகரங்களில் தங்கி பணியாற்றியுள்ளனா். இவா்களிடம் சட்டபூா்வமாக எந்த ஆவணமும் இல்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT