இந்தியா

இந்திய ரயில்வே வரலாற்றிலேயே மிக மோசமான 5 ரயில் விபத்துகள்!

3rd Jun 2023 01:33 PM

ADVERTISEMENT

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஆக அதிகரித்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த ரயில் விபத்து சமீப காலங்களில் நாட்டில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகும் மற்றும் நாடு முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த கோர விபத்தை அடுத்து, இந்திய ரயில்வே வரலாற்றிலேயே இதுவரை மிக மோசமான 5 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அது குறித்து பார்ப்போம்: 

பிகார் ரயில் விபத்து (500-800 பேர் பலி):  1981 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி பிகார் அருகே பாக்மதி ஆற்றில் பயணிகள் ரயில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 500 முதல் 800 இறப்புகளுடன் நாட்டின் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகும். 

பிரோசாபாத் ரயில் விபத்து(358 பேர்பலி): 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரோசாபாத் அருகே காளிந்தி விரைவு ரயில் மீது புருஷோத்தம் விரைவு மோதி விபத்துக்குள்ளாதில் 358 பேர் பலியானார்கள்.

ஆ​வத்-அஸ்ஸாம்​ விரைவு​ ரயில் விபத்து (268 பேர் பலி): 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி அஸ்ஸாமில் இருந்து இந்திய வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பிரம்மபுத்ரா ரயில் எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது  கவுகாத்திக்கு செல்லும் வழியில் ஆவாத்-அஸ்ஸாம் விரைவு ரயில் கெய்சல் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த போது மோதி விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 268 பேர் பலியாகினர் மற்றும் சுமார் 359 பேர் காயமடைந்தனர்.  

ஜம்மு தாவி-சீல்டா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து (212 பேர் பலி): 1998 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஜம்மு தாவி-சீல்டா விரைவு ரயில், பஞ்சாப் மாநிலம் கன்னாவில் அமிர்தசரஸ் செல்லும் எல்லைப்புற கோல்டன் டெம்பிள் ரயிலின் தடம் புரண்ட மூன்று பெட்டிகள் மீது மோதிய பயங்கர விபத்தில் 212 பேர் பலியாகினர்.

ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து(170 பேர் பலி): 2010 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கெமசூலி மற்றும் சர்திஹா இடையே மும்பை செல்லும் ஹவுரா குர்லா லோக்மான்ய திலக் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் விரைவு ரயிலில் மாவோயிஸ்டுகள் நடத்திய சந்தேகத்திற்குரிய தாக்குதலில் குறைந்தது 170 பேர் பலியாகினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT