அமர்நாத் குகை லிங்கத்தின் முதல் புகைப்படத்தை ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
வருடாந்திர அமர்நாத் யாத்திரையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள குகைக் கோயிலில் சனிக்கிழமை சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.
இந்த சிறப்புப் பூஜையில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா காணொலிக் காட்சி மூலமாக பிரதம் பூஜையில் பங்கேற்றார்.
ஆண்டுதோறும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்துக்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான புனித பயணமாக இது கருதப்படுகிறது.
படிக்க: இந்தக் கருவி இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம்!
மக்கள் பாதுகாப்பான வகையில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31 வரை நடைபெற உள்ளது. அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கியது.