இந்தியா

ஒடிசாவுக்கு விரைந்த எய்ம்ஸ் மருத்துவக் குழு!

3rd Jun 2023 02:43 PM

ADVERTISEMENT

 

ஒடிசா கோர ரயில் விபத்தில் சிக்கியவர்களின் நிவாரண நடவடிக்கைகளுக்காக எய்ம்ஸ்-புபனேஸ்வர் இரண்டு மருத்துவர்கள் குழுவை அனுப்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார். 

ஒடிசாவின் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ஆம் தேதி இரவு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

படிக்க: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடை: விலை எவ்வளவு? எங்கு, எப்போது வாங்கலாம்? 

ADVERTISEMENT

கொடூரமான இந்த ரயில் விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். 

நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக பாலாசோர் மற்றும் கட்டாக் ஆகிய இரு மாவட்டங்களுக்கும் இரண்டு மருத்துவர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT