இந்தியா

ஒருநாள் பிணை: திகார் சிறையிலிருந்து வீட்டுக்கு வந்தார் மனீஷ் சிசோடியா!

DIN

மனீஷ் சிசோடியாவிற்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து மனீஷ் சிசோடியா தன் மனைவியைச் சந்திக்க தில்லி திகார் சிறையிலிருந்து தன் இல்லத்திற்கு வந்துள்ளார். 

மனீஷ் சிசோடியாவின் 49 வயதான மனைவி சீமா சிசோடியாவுக்கு ஆட்டோ இம்யூன் பிரச்னை உள்ள நிலையில், அவர் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக அவர் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள மனைவியை சந்திக்க மனீஷ் சிசோடியாவிற்கு தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

தன் மனைவியை சந்திக்க காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனீஷ் சிசோடியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, மூத்த சிறை அதிகாரி ஒருவர் சிசோடியாவை காலை 9 மணியளவில் பாதுகாப்புப் படையுடன் தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

சிசோடியா தன் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு எந்த நபர்களுடனும் தொடர்புகொள்ளக்கூடாது என்றும் தொலைபேசி, இணையத்தை அணுகக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT