இந்தியா

நன்றாக இருந்தால் ஏன் கலால் கொள்கை திரும்பப் பெறப்பட்டது? உயா்நீதிமன்றம் கேள்வி

2nd Jun 2023 12:39 AM

ADVERTISEMENT

 

‘மிகவும் நல்லது‘ எனக் கூறப்பட்டபோது, கலால் கொள்கை ஏன் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது என்பதை விளக்குமாறு முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தரப்பிடம் தில்லி உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.

ஊழல் வழக்கில் எழுந்த பணமோசடி வழக்கில் சக குற்றம்சாட்டப்பட்ட நபரான விஜய் நாயரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தினேஷ் குமாா் சா்மா, சிசோடியா தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் ‘மிகவும் நல்லது‘ எனக் கூறப்பட்டபோது, கலால் கொள்கை ஏன் திரும்பப் பெற

முடிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பினாா். மேலும்,

ADVERTISEMENT

தமது கேள்விக்கு ‘நிச்சயமான பதிலைப் பெற வேண்டும்‘ என்று கேட்டுக் கொண்டாா்.

மனீஷ் சிசோடியா, துணை முதல்வா் பதவிதவிர கலால் உள்ளிட்ட வேறு பல துறைகளின் அமைச்சராகவும் இருந்தாா்.

விசாரணையின்போது சிசோடியா தரப்பில் ஆஜாரன வழக்குரைஞா், ‘இடைக்கால ஜாமீனில் விடுவிக்கக் கோரி சிசோடியா மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளாா். தில்லி துணைநிலை ஆளுநா் மதுபான விற்பனை நிலையங்களை ‘இணக்கமற்ற‘ மண்டலங்களில் திறக்க அனுமதிக்காததால் நஷ்டத்திற்கு வழிவகுத்ததால், கலால் கொள்கை திரும்பப் பெறப்பட்டது.

மேலும், பத்து ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த முந்தைய கொள்கையின் கீழ் இத்தகைய பகுதிகளில் மதுபான கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டன என்றாா்.

அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிடுகையில், குற்றம் சாட்டப்பட்டவா்களின் தவறுகள் ‘அம்பலப்படுத்தப்பட்டதால்‘ கொள்கை திரும்பப் பெறப்பட்டதாகக் கூறினாா்.

கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் சிசோடியாவின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அவரது மனைவியின் உடல்நிலை மோசமடைந்ததால் இடைக்கால ஜாமீன் கோரி சிசோடியா சாா்பில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை மற்றும் சிசோடியா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தனா். இவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரக்கூடும்.

கடந்த மே 24 அன்று, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகிய இரண்டு வழக்குகளிலும் இடைக்கால ஜாமீன் கோரி சிசோடியா தாக்கல் செய்திருந்த அவரது மனுக்களை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT