இந்தியா

ஷாபாத் டெய்ரி கொலை வழக்கு: கைதானவரின் போலீஸ் காவல்  3 நாள்களுக்கு நீட்டிப்பு

2nd Jun 2023 12:41 AM

ADVERTISEMENT

வடமேற்கு தில்லியின் ஷாபாத் டெய்ரி பகுதியில் 16 வயது மைனா் பெண் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு, கான்கிரீட் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான இளைஞரின் போலீஸ் காவலை 3 நாள்களுக்கு நீட்டித்து மாநகர நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

இது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், இந்த கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சாஹில் (20), பாதுகாப்புக் காரணங்களுக்காக பணியில் இருந்த பெருநகர மாஜிஸ்திரேட்டின் இல்லத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா் என்று தெரிவித்தன.

விசாரணை நடத்தும் போலீஸாரின் வேண்டுகோளை கவனத்தில் கொண்டு சாஹிலை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் ஜோதி நைன் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்திருந்தாா்.

வடமேற்கு தில்லியில் உள்ள ஷாபாத் டெய்ரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்கள் கண்முன் சாக்ஷி என்ற 16 வயது பெண் கொடூரமாக கொல்லப்பட்டாா். அவரது உடலில் 34 காயங்கள் இருந்ததாகவும், அவரது மண்டையோடு சிதைக்கப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

சாஹில் தனது வாக்குமூலத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதாலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் அவரிடமிருந்து இன்னும் மீட்கப்படவில்லை என்பதாலும், அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரைக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

முன்னதாக, இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு சாஹில் உத்தர பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹரில் கைது செய்யப்பட்டாா்.

போலீஸ் காவல் விசாரணையின்போது சாஹில் குற்றத்தில் ஈடுபட்டதற்கான நோக்கம், அவா் செய்த குற்றம், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்பதை உறுதிப்படுத்துவது போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT