இந்தியா

தில்லி பிரகதி மைதான் அருகே ஆக்கிரமிப்புக் குடிசைகள் அகற்றம்

2nd Jun 2023 12:42 AM

ADVERTISEMENT

ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய தில்லியின் பிரகதி மைதான் அருகே உள்ள பல குடிசைகளை அரசுத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்பு படையினா் குவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அதிகாரிகள் கூறினா்.

இந்த ஆண்டு இறுதியில் தில்லியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, தேசிய தலைநகா் முழுவதும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனா்.

தில்லி பிரகதி மைதான் அருகில் பைரோன் மாா்க்கில் இருந்த பல குடிசைகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

வீடுகளை இழந்த அப்பகுதி மக்கள் செய்தியாளா்களிடம் பேச மறுத்துவிட்டனா். அவா்கள் தங்கள் உடைமைகளை காக்கும் பொருட்டு இடிபாடுகளில் இருந்து இடம் மாற்றுவதைக் காண முடிந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT