இந்தியா

ராஜஸ்தானில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதத்தில் வரலாறு காணாத மழை: வானிலை ஆய்வு மையம்

2nd Jun 2023 04:26 PM

ADVERTISEMENT

 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் 62.4 மிமீ மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தானில் பொதுவாக மே மாதத்தில் சராசரியாக 13.6 மிமீ மழை பெய்யும். ஆனால் இந்த முறை வடமேற்கு இந்தியாவில் பெய்த பருவமழை அல்லாத மழைப்பொழிவு மற்றும் பிறகாரணங்களால் 62.4 மிமீ மழை பெய்துள்ளது.

கடந்த 1917 ஆம் ஆண்டு மே மாதத்தில் 71.9 மிமீ மழை பதிவானது. அதன் பிறகு 100 ஆண்டுகள் கழித்து தற்போது கடந்த மே மாதத்தில் அதிக மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தமிழ்நாடு அரசில் வேலை வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

இன்று வெள்ளிக்கிழமை(ஜூன் 2) பிகானேர், ஜோத்பூர், அஜ்மீர், ஜெய்ப்பூர் மற்றும் பரத்பூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் ஜூன் 5 மற்றும் 6 ஆம் தேதி  வரை தொடர வாய்ப்புள்ளது.

ஜூன் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் இருந்து வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT