இந்தியா

கோவாவின் முதல் வந்தே பாரத் ரயில்: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

2nd Jun 2023 04:01 PM

ADVERTISEMENT

 

கோவாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை நாளை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். 

இந்தியாவின் 19வது வந்தே பாரத் விரைவு ரயிலை இந்திய ரயில்வே நாளை தொடங்க உள்ளது. இந்த அதிவேக ரயிலானது கோவா மற்றும் மகாராஷ்டிரத்தை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. 

மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் நிலையத்தில் புறப்பட்டு கோவாவின் மட்கான் நிலையங்களுக்கு இடையே இந்த ரயில் இயங்கும். கடந்த வாரம் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. 

ADVERTISEMENT

படிக்க: பணவரவு அதிகரிக்கும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

புதிய வந்தே பாரத் ரயில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இது குறைந்தது சுமார் ஏழு மணி நேரத்தில் இந்த தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்கின்றது. காலை 10.30 மணிக்கு மட்கான் ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கி மாலை 5.30 மணிக்கு மும்பையை அடைகிறது. 

வந்தே பாரத் ரயிலின் மூலம் கோவாவுக்கு செல்லும் பயண நேரம் குறையும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

படிக்க: தமிழகத்தில் 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தி எடுக்குமாம்: வெளியே வராதீங்க..

ADVERTISEMENT
ADVERTISEMENT