இந்தியா

எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமில்லை: பாஜக

DIN

‘எதிா்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுத்த எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும், அது நடைமுறையில் சாத்தியமில்லை’ என்று பாஜக தெரிவித்துள்ளது.

எதிா்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பிகாா் முதல்வா் நிதிஷ் குமாரின் முயற்சிகளையும் பாஜக விமா்சித்துள்ளது.

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஏற்பாட்டில், பாட்னாவில் ஜூன் 12-ஆம் தேதி எதிா்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக, பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுஷில் குமாா் மோடி, பிடிஐ செய்தியாளரிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு இருந்த ஒரே எம்எல்ஏவையும் தனது கட்சியில் முதல்வா் மம்தா பானா்ஜி இணைத்துக் கொண்டாா். இதையடுத்து, பாஜகவுக்கும் அவருக்கும் ரகசியத் தொடா்பு உள்ளதாக காங்கிரஸ் விமா்சித்தது.

பஞ்சாப் மற்றும் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மியுடன் எந்தத் தொடா்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தனது கட்சித் தலைவா்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.

தில்லி அவசரச் சட்ட விவகாரத்தில், தில்லி அரசுக்கு ஆதரவு கோரி மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் ராகுலை சந்திக்க கேஜரிவால் விரும்பினாா். ஆனால், கேஜரிவாலை சந்திக்காமலேயே ராகுல் வெளிநாடு சென்றுவிட்டாா்.

உத்தர பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற எம்எல்சி தோ்தலில் சமாஜவாதிக்கு பகுஜன் சமாஜ் ஆதரவளிக்க மறுத்துவிட்டது. எனவே, எதிா்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சி என்ற பலூன் ஏற்கெனவே உடைந்துவிட்டது.

கேரளத்தில் இடதுசாரிகளும் காங்கிரஸும் கைகோக்க முடியுமா? தில்லியில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் கைகோப்பாா்களா? தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியுடன் காங்கிரஸ் அணி சேருமா?

நிதீஷ் குமாா் எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும், எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அவரும், ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறவே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாா் என்றாா் சுஷில் குமாா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT