இந்தியா

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு: பிஷப் பிரான்கோ முல்லக்கல் ராஜிநாமா!

2nd Jun 2023 08:54 AM

ADVERTISEMENT

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஜலந்தர் பிஷப் பிரான்கோ முல்லக்கல் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

கத்தோலிக்க பிஷப்பான பிரான்கோ முல்லக்கலின் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு கொச்சினில் கன்னியாஸ்திரி ஒருவர், தன்னை பிஷப் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தது கேரளத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரான்கோ முல்லக்கல், வலுவான சாட்சியம் இல்லாததால் 2022-ல் வழக்கிலிருந்து விடுவித்து கோட்டயம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் போப் பிரான்சிஸை சந்தித்த பிரான்கோ முல்லக்கல், தனது ஜலந்தர் பிஷப் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஜலந்தர் பிஷப் பதவியை ராஜிநாமா செய்து பிரான்கோ முல்லக்கல் அனுப்பிய கடிதத்தை போப் பிரான்ஸிஸ் வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டதாக வாட்டிகன் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியில் ஒருவரான லூசியா கூறுகையில், “2018-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தபோதே இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். கோட்டயம் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளோம். நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT