இந்தியா

மனீஷ் சிசோடியாவிற்கு ஒருநாள் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

2nd Jun 2023 05:45 PM

ADVERTISEMENT

மனீஷ் சிசோடியாவிற்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

‘மனீஷ் சிசோடியாவின் 49 வயதான மனைவி சீமா சிசோடியாவுக்கு ‘ஆட்டோ இம்யூன்’ பிரச்னை உள்ளது. ‘மல்டிபிள் ஸ்களீரோசிஸ்’ நோயால் அவா் பாதிக்கப்பட்டுள்ளாா்.

இதற்காக அவர் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள மனைவியை சந்திக்க மனீஷ் சிசோடியாவிற்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதன்படி நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனீஷ் சிசோடியா தனது மனைவி காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கலால் கொள்கை வழக்கில் பிப்ரவரியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் தில்லி துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டாா். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT