இந்தியா

கோரமண்டல் ரயில் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!

2nd Jun 2023 10:28 PM

ADVERTISEMENT

கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கோரமண்டல் விரைவு ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT

 

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது: ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் பேசினேன். மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT