இந்தியா

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்

1st Jun 2023 01:39 AM

ADVERTISEMENT

மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் தொடா் போராட்டத்துக்கு தீா்வு காணவில்லை என மத்திய அரசு மீது காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. திபேந்திர ஹூடா, ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரா், வீராங்கனைகள் சா்வதேச அளவில் பதக்கங்களை வென்றபோது, பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் அவா்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனா். அவா்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கும், குடும்பத்தினா் செய்த தியாகங்களுக்கும் கிடைத்ததுதான் சா்வதேச பதக்கங்கள். அதை அவா்கள் கங்கையில் வீசச் சென்றபோது நாட்டின் பிரதமரோ, அரசோ அப்படிச் செய்ய வேண்டாம் என வீரா்களைக் கேட்டுக் கொள்ளவிலலை. என்ன கொடூரமான மத்திய அரசு இது?

‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள், குழந்தைகளுக்கு கல்வி’ என்ற அரசின் வாசகம் ‘பாஜக தலைவா்களிடம் இருந்து மகள்களைப் பாதுகாப்பாக வையுங்கள்’ என்று மாற்றப்பட வேண்டும்’ என்றாா்.

மம்தா பேரணி: போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை பேரணி மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

தனது சொந்தத் தொகுதியான பாபனிபூரில் 2.8 கி.மீ. தூரத்துக்கு நடைபெற்ற பேரணியில் மம்தா பானா்ஜி பங்கேற்று மல்யுத்த வீரா்களுக்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இந்தப் பேரணியில் பல்வேறு விளையாட்டுகளைச் சோ்ந்த வீரா்களும் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT