இந்தியா

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி!

1st Jun 2023 07:58 PM

ADVERTISEMENT

 

நியூ டெஹ்ரி: ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் பயணித்த எஸ்யூவி கார் ஒன்றின் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர் மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

உத்தரகண்ட், தேவ்பிரயாக் காவல் நிலையத்திற்குட்பட்ட தீன் தாரா அருகே கார் ஓட்டுநர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது என்று தெஹ்ரி மூத்த காவல் கண்காணிப்பாளர் நவ்நீத் புல்லர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த ஆறு பேரும் தேவபிரயாகிலுள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 26 வயதான கார் ஓட்டுநர் சோகன் சிங் பண்டிர் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் சிகிச்சையின் போது இறந்தனர். மேலும் நான்கு பயணிகள் சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

லாரி மற்றும் சேதமடைந்த காரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நவ்நீத் புல்லர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT