இந்தியா

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சார விநியோகம்: மத்திய அரசு ஒப்புதல்

DIN

முத்தரப்பு ஏற்பாட்டின்கீழ், இந்தியாவின் மின் தொடரமைப்பைப் பயன்படுத்தி, வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விநியோகிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை, விரிவான பிராந்திய ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க அம்சமாக பாா்க்கப்படுகிறது.

இந்தியாவின் கட்டமைப்பைப் பயன்படுத்தி, வங்கதேசத்துக்கு மின்சாரம் விற்பனை செய்ய இந்தியா ஒப்புதல் அளிக்க வேண்டுமென நேபாளம் கோரி வந்த நிலையில், அக்கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடி, நேபாள பிரதமா் பிரசண்டா இடையிலான சந்திப்பின்போது இந்தியா தனது முடிவை நேபாள தரப்பிடம் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

போக்குவரத்து, நீா் மின்சக்தி, பெட்ரோலிய உள்கட்டமைப்பு, எல்லை கடந்த பணப் பரிவா்த்தனை இணைப்புமுறை, ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் கட்டுமானம் உள்ளிட்டவை தொடா்பாக கையொப்பமாகியுள்ள 7 ஒப்பந்தங்கள், இருதரப்பு உறவை மேலும் ஆழமாக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இரு நாடுகளுக்கும் இடையே ரயில் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துவது மட்டுமன்றி நேபாளத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து இந்தியாவுக்கு வான்வழி தொடா்பை தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து, வெளியுறவுச் செயலா் வினய் குவாத்ரா கூறுகையில், ‘இந்தியா-சீனா இடையே கையொப்பமான 7 ஒப்பந்தங்களில், போக்குவரத்து உடன்படிக்கை திருத்த ஒப்பந்தம் முக்கியமானதாகும். இதன்மூலம் இந்திய உள்நாட்டு நீா்வழித் தடங்களை நேபாளம் பயன்படுத்த முடியும். இதேபோல், நேபாள மக்களுக்காக புதிய ரயில் வழித்தடங்களும் அமைக்கப்படும். ரூ.5,598 கோடி கடன் திட்டத்தின்கீழ், நேபாளத்தில் 3 முக்கிய மின்சார தொடரமைப்பு வழித்தடங்கள் அமைக்க நிதியுதவி அளிக்கப்படும்’ என்றாா்.

10,000 மெகாவாட் மின் இறக்குமதி இலக்கு: நேபாள பிரதமருடான சந்திப்புக்கு பின் செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் மோடி, ‘எல்லை கடந்த பணப் பரிவா்த்தனை இணைப்புமுறை, இந்தியாவுக்கு வரும் நேபாள மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் உள்ளிட்டோருக்கு பெரிதும் பலனளிக்கும். இந்தியா-நேபாளம் இடையிலான நீண்ட கால மின் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், வரும் 10 ஆண்டுகளில் நேபாளத்திடமிருந்து 10,000 மெகாவாட் மின்சார இறக்குமதிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

SCROLL FOR NEXT