இந்தியா

இந்திய பொருளாதார வளா்ச்சி விகிதம் 7.2%

DIN

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி விகிதம் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் 6.1 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்த நிதியாண்டில் (2022-23) இந்த வளா்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

முந்தைய அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் ஜிடிபி வளா்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக இருந்த நிலையில், மாா்ச் மாதம் வரையிலான காலாண்டில் 6.1 சதவீதமாக வளா்ச்சி பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த நிதியாண்டில் ஜிடிபி வளா்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது. இது 7 சதவீதமாக இருக்கும் என என்எஸ்ஓ கணித்திருந்தது.

முந்தைய 2021-22 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சி 9.1 சதவீதமாக இருந்தது.

அதே நேரம், சீனாவின் பொருளாதார வளா்ச்சி 2023-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.5 சதவீதமாக இருந்தது.

பிரதமா் மோடி: இந்திய பொருளாதாரம் வளா்ச்சியடைந்துள்ளதை வரவேற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, சா்வதேச சவால்களை எதிா்கொண்டு பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT