இந்தியா

பிகாரில் பயிற்சி ஆசிரியர் சுட்டுக் கொலை!

1st Jun 2023 01:39 PM

ADVERTISEMENT

 

பாட்னா: பிகாரின் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தின் ஆசிரியர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதன்கிழமை இரவு பார்பிகாவில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பார்பிகா-மெஹஸ் சாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் ஆசிரியரை தடுத்து நிறுத்தியுள்ளனர். 

அதில், ஒருவர் ஆசிரியரின் தலைக்கவசத்தை அகற்றியும், மற்றொருவர் அவரை துப்பாக்கியாலும் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த ஆசிரியர் குமாரை மீண்டும் நான்கு முறை மர்ம நபர் சுட்டுள்ளார். 

ADVERTISEMENT

பலியான பயிற்சி ஆசிரியர் குமார் நிலேஷ் மெஹஸ் காவல் நிலையத்தின் கீழ் தர்ம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT