இந்தியா

ஆந்திரம், தெலங்கானாவில் சாலை விபத்து: 8 பேர் பலி

1st Jun 2023 11:34 AM

ADVERTISEMENT

 

ஆந்திரம், தெலங்கானாவில் நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துக்களில் 8 பேர் உயிரிழந்தனர். 

ஆந்திரத்தின் திருப்பதியில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்தனர். 

யெர்பேடு மண்டலில் மெர்லபகா செரு அருகே திருப்பதி-ஸ்ரீகாலஹஸ்தி நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. 

ADVERTISEMENT

தெலங்கானாவின் மகாபுபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திருமலையில் தரிசன்ம் செய்து திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இறந்தவர்கள் அசோக் (40), வெங்கடம்மா (37), மகன் சாரி (6) என அடையாளம் காணப்பட்டனர்.

மற்றொரு விபத்தில், தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள கொனிஜெர்லாவில் 
இரண்டு லாரிகளுக்கு இடையே கார் சிக்கியதில், காரில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். 

இறந்தவர்கள் ராஜேஷ், சுஜாதா அவர்களது 13 வயது மகன் அஸ்வித் என அடையாளம் காணப்பட்டனர்.

தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடந்த மூன்றாவது விபத்தில், டிராக்டர் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். கேஷம்பெட் மண்டலில் உள்ள அல்வால் குறுக்கு வழியில் இந்த விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் ஷாட்நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT