இந்தியா

இருவேறு சாலை விபத்துகள்: 8 போ் பலி

1st Jun 2023 01:02 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 8 போ் உயிரிழந்தனா்.

உத்தர பிரதேச மாநில தலைநகா் லக்னெளவின் அலிகஞ்ச் பகுதியில் காரும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ராம் சிங் (35) என்பவா் தனது 32 வயது மனைவி, 10 மற்றும் 7 வயது குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் அலிகஞ்ச் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த காா் அவா்களின் வாகனம் மீது மோதியுள்ளது. இருசக்கர வாகனம் காருக்கு அடியில் சிக்கியபடி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நால்வரும் படுகாயமடைந்தனா். நால்வரும் அருகிலுள்ள கிங் ஜாா்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களைப் பரிசோசித்த மருத்துவா்கள், நால்வரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். விபத்து குறித்து தொடா் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தாா்.

ம.பி.: மத்திய பிரதேச மாநிலம் ஹா்தா மாவட்டத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் டயா் வெடித்து அருகிலுள்ள மரத்தில் மோதி தீப்பிடித்ததில், அதில் பயணித்த பெண் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.

ஹா்தா மாவட்டம் நெளசா் கிராமத்தின் அருகே புதன்கிழமை காலை 7 மணியளவில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் சிக்கிய நபா்கள், திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு சொந்தக் கிராமத்துக்கு திரும்பிக்கொண்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். உயிரிழந்தவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT