நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,432 ஆகக் குறைந்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இன்று புதிதாக 43 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 4,49 கோடியாக பதிவாகியுள்ளது.
இன்று காலை 8 மணி அறிக்கையின்படி கரோனா பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 5,31,915 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: ஆர்ஜென்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 98.81 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் இதுவரை 1.18 சதவீதம் பேர் கரோனா பாதித்து இறந்துள்ளனர். 4,44,61,565 பேர் கரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.67 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.