இந்தியா

தொழிலதிபர் தினேஷ் அரோராவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

17th Jul 2023 04:34 PM

ADVERTISEMENT

 

தில்லி கலால் ஊழல் தொடா்பாக சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் தொழிலதிபர் தினேஷ் அரோராவுக்கு மேலும் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கியுள்ளது. 

தொழிலதிபா் தினேஷ் அரோரா ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவின் நெருங்கிய கூட்டாளி என்றும், அவா் கலால் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றால் கடந்த ஜூலை 6-ம் தேதி கைது செய்யப்பட்டார். 

படிக்க: ஆடி மாதம் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும்!

ADVERTISEMENT

இந்நிலையில், அரோராவின் நீதிமன்றக்காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அரோராவுக்கு மேலும் 14 நாள்கள்(ஜூலை 31) வரை  நீதிமன்றக் காவல் நீடித்து சிறப்பு நீதிபதி எம்.கோ. நாக்பால் இன்று உத்தரவிட்டுள்ளார். 

இதனிடையே, அரோரா தனது மனைவியின் உடல்நலத்தைக் கோரி இடைக்கால ஜாமீன் மனுவை அளித்திருந்தார். ஆனால், இந்த வழக்கின் விசாரணை ஜூலை 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது. 

மேலும், தனிச்சிறை கோரி அரோரா அளித்த மனுவை நீதிமன்றம் ஏற்றுள்ளது. அதனடிப்படையில் தனிச் சிறை வழங்க நீதிமன்றம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

படிக்க: ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் நடத்துவதில்லை ஏன்?

ADVERTISEMENT
ADVERTISEMENT