அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
படிக்க: ஆடி மாதம் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும்!
இந்நிலையில், தில்லி முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கட்சிகளை உடைத்து அனைவரையும் அச்சுறுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்தியா போன்ற பெரிய நாட்டை அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முயைது என்று அவர் தெரிவித்தார்.
படிக்க: ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் நடத்துவதில்லை ஏன்?