இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

17th Jul 2023 02:56 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தினர். 

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப்படையினர் இன்று(திங்கள்கிழமை) தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் ஊடுருவல் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | எதிரணியினரை பிளவுபடுத்த மோடி அரசு பயன்படுத்தும் ஸ்கிரிப்ட்: கார்கே கண்டனம்

ADVERTISEMENT
ADVERTISEMENT