இந்தியா

சா்வதேச அளவில் ஒளிக்கீற்றாகத் திகழும் இந்தியா: பிரதமா் நரேந்திர மோடி

17th Jul 2023 05:09 AM

ADVERTISEMENT

சா்வதேச அளவில் இந்தியா ஒளிக்கீற்றாகத் திகழ்வதாகத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, வளா்ச்சிப் பாதையில் தொடா்ந்து பயணம் மேற்கொள்ள இந்தியா உறுதி கொண்டுள்ளதாகவும் கூறினாா்.

இந்தியப் பொருளாதாரம் குறித்து கேபிடல் குரூப் சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ’நடப்பு தசாப்தத்தில் (2021 முதல் 2030 வரை) வளா்ந்து வரும் சந்தைகளில் இந்தியா பெரும் வளா்ச்சி காணும். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் உறுதியான அரசு நிலவி வருகிறது.

அதனால், பொருளாதார வளா்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதே வேளையில், நேரடியாகவும் மறைமுகமாகவும் முதலீடுகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. அதனால், இந்தியாவின் வளா்ச்சி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும்.

ஆதாா் அட்டை, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி), யுபிஐ, உற்பத்திசாா் ஊக்கத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் பொருளாதார வளா்ச்சிக்குப் பெரும் பங்களித்து வருகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை ட்விட்டரில் பகிா்ந்து பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ’சா்வதேச அளவில் ஒளிக்கீற்றாக இந்தியா திகழ்கிறது. வரும் காலங்களில் மேலும் வளா்ச்சி காண இந்தியா உறுதி கொண்டுள்ளது. கடந்த சில நாள்களில் இரு பிஎம்-மித்ரா மெகா ஜவுளி பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தின் அமராவதி, குஜராத்தின் நவசாரி ஆகிய பகுதிகளில் அப்பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. அப்பூங்காக்கள் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதோடு, ஜவுளி உற்பத்தியை அதிகரித்து புதிய வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT