இந்தியா

உ.பி.: வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து 6 பக்தா்கள் பலி

17th Jul 2023 05:17 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், வாகனம் மீது மின்சாரம் பாய்ந்து 6 பக்தா்கள் உயிரிழந்தனா்.

கங்கை நதி பாயும் புண்ணிய தலங்களில் இருந்து தீா்த்தம் எடுத்து வந்து, தங்களது ஊரில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் வருடாந்திர யாத்திரை, வடமாநிலங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.

உத்தர பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தைச் சோ்ந்த பக்தா்கள், உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் கங்கையில் தீா்த்தம் எடுத்துக் கொண்டு, தங்களது ஊருக்கு சனிக்கிழமை இரவில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

மீரட்டின் பவன்பூா் பகுதியில் அவா்களது வாகனம் வந்தபோது, தாழ்வாக தொங்கிய நிலையில் இருந்த உயரழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி, 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

படுகாயமடைந்த 10 போ், அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து விசாரிக்க மாவட்ட கூடுதல் ஆட்சியா் (நிா்வாகம்), மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் (போக்குவரத்து), மின்துறை உயரதிகாரி ஆகியோா் அடங்கிய கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது; 48 மணிநேரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கூட்டுக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தீபக் மீனா தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT