இந்தியா

பிரதமர் மோடி நாளை(ஜூலை 13) பிரான்ஸ் பயணம்!

12th Jul 2023 12:58 PM

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 13- 15 தேதிகளில் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்குச் செல்கிறார். 

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 13 ஆம் தேதி பாரிஸ் செல்கிறார். ஜூலை 14 ஆம் தேதி பிரான்ஸின் தேசிய தினத்தையொட்டி நடைபெறும் அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருக்கிறார். இதில் இந்தியாவின் முப்படைகளின் ஆயுதப்படையும் கலந்துகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் அதிபர் அலுவலகம் சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படவுள்ளது. 

மேலும் பிரான்ஸ் நாட்டின் செனட் மற்றும் நாடாளுமன்றத் தலைவர்களையும் பிரதமர் சந்திக்க உள்ளார். பிரான்சில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார். 

ADVERTISEMENT

தொடர்ந்து ஜூலை 15 ஆம் தேதி பிரதமர் மோடி அபுதாபி செல்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஹெச்.எச்.ஷேக் முகமது பின் சயீத்துடன் இரு நாடுகள் உறவு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். 

உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களுடன் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க | ம.பி.யில் 78,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு!

ADVERTISEMENT
ADVERTISEMENT