மத்தியப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 78 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் எழுத்துப்பூர்வமான பதிலில் இந்த தரவுகளை வழங்கினார்.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் பெரும்பாலும் பலவீனமானவர்களாகவும், உணவுப் பற்றாக்குறை காரணமாக மோசமான ஆரோக்கியத்தைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
இந்தாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் சுமார் 78 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது. இதில் 21,631 குழந்தைகள் அதிகளவிலான ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர் என்று அடல் பிஹாரி வாஜ்பாய் குழந்தைகள் நலம் மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
படிக்க: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
மேலும், இந்தூர் பிரிவில் சுமார் 22,721 குழந்தைகளும், பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களான அலிராஜ்பூர் மற்றும் ஜாபுவா ஆகிய மாவட்டங்களிலும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகம் காணப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.