கர்நாடகத்தில் ஜெயின் துறவி மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி பெங்களூருவில் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவின் சிக்கோடி தாலுகாவில் உள்ள ஹிரேகோடி கிராமத்தில் உள்ள மடத்தில் தங்கியிருந்த ஜெயின் துறவி ஒருவர் காணாமல் போனதாக முதலில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் இறந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
கடன் வாங்கிய விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயின் துறவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பெங்களூருவில் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், 'சட்டம் மற்றும் காவல்துறைக்கு பயம் இல்லை. சமூக விரோதிகள் அனைவரும் வெளிப்படையாக வெளியே வந்துள்ளனர். இது சாமானியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு மறைமுகமாக இதுபோன்ற காரியங்களுக்கு துணைபோகிறது. ஜெயின் துறவி வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்து மாநில அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்' என்று பேசினார்.
இதையும் படிக்க | ராசிபுரம் பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை!