கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து அமர்நாத் பயணிகள் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், பஹல்காம் வழித்தடத்தில் பயணித்த மூவர், பால்டால் பாதையில் பயணித்த இருவர் உள்பட கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் மாரடைப்பு காரணமாக பலியாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் உத்தரப் பிரதேசத்தையும், ஒருவர் மத்தியப் பிரதேசத்தையும் சேர்ந்தவர் ஆவார். மேலும் ஒருவரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
படிக்க: ஒடிசா ரயில் விபத்து: 7 ரயில்வே ஊழியர்கள் இடைநீக்கம்!
ஐந்து இறப்புகளோடு இந்தாண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கி பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளன. இதில் இந்திய-திபெத் பாதுகாப்புப் படை அதிகாரியும் அடங்குவர்.
அதிக உயரம் காரணமாக ஆக்ஸிஜன் செறிவு குறைவதால் மாரடைப்பு போன்ற இயற்கை மரணங்கள் நிகழ்கிறது. இது ஒவ்வொரு வருடமும் நிகந்துவரும் ஒன்றாகவே உள்ளது.