மும்பை: பல்வேறு சங்கிலிப் பறிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, ஓராண்டுகளுக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போதுதான் அவர்களுக்கு பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் தெரிய வந்தன.
வெறும் சங்கிலிப் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபடும் சாதாரணக் குற்றவாளியைக் காவல்துறையினரால் ஏன் இத்தனை நாள்கள் கைது செய்ய முடியாமல் போனது என்பதற்கான விடையும் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
இதையும் படிக்க.. ஆண் குழந்தைக்கே இன்னமும் ஆசைப்படுகிறார்கள் இந்தியர்கள்!
திருடன் தனது வீடு மற்றும் வீட்டைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, காவல்துறையினர் தன்னைத் தேடி வருவதை முன்கூட்டியே அறிந்து, வீட்டிலிருந்து தப்பிவிடுவதும், மாதச் சம்பளம் கொடுத்து, தான் வாழும் பகுதியில் ஏழு உளவாளிகளை நியமித்து, அவர்கள் காவலர்கள் அப்பகுதியை நோட்டமிடுவதை முன்கூட்டியே தெரிவித்துவிடுவதும்தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. டாஸ்மாக்: கூச்சப்பட வேண்டாமா, அரசு? 90 மி.லி.யும் விடிகாலைக் கடைத்திறப்பும்!
ஃபைசல் அலி என்ற அந்த சங்கிலிப் பறிப்புத் திருடன், இதற்காக 8 பெண்களை உளவாளிகளாக நியமித்துள்ளார். அவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருடனைத் தேடி காவலர்கள் வந்தபோது, அவர்களை இந்தப் பெண்கள் தாக்கியும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஃபைல் அலி கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் 56 சங்கிலிப் பறிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.