இந்தியா

தென் கொரியா, தாய்லாந்து வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் பேச்சு

DIN

தென் கொரியா, தாய்லாந்து நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

தென் கொரியா வெளியுறவு அமைச்சா் பாா்க் ஜின்னுடன் நடத்திய பேச்சு தொடா்பாக ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், இரு நாடுகளிடையேயான 50 ஆண்டுகள் நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. ஜி20 மாநாட்டில் தென் கொரியா பங்கேற்பதை எதிா்பாா்த்து இருப்பதாக தெரிவித்துள்ளாா்.

மாா்ச் முதல் வாரத்தில் ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உலக நாடுகள் எதிா்கொள்ளும் சா்வதேச பிரச்னைகள் குறித்தும் உக்ரைன் போா் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதேபோல், தாய்லாந்து வெளியுறவு அமைச்சா் டான் பிரமுவின்னையுடனும் அமைச்சா் ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா்.

இருநாட்டு நல்லுறவு குறித்தும், மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சி குறித்தும் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும் ஜெய்சங்கா் தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்தாா்.

மேலும், ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று இருநாட்டு வெளியுறவு அமைச்சா்கள் விவாதித்ததாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT