இந்தியா

‘இந்திய பட்ஜெட் மீது உலக நாடுகளின் பார்வை’: பிரதமர் மோடி

DIN

உலக நாடுகளின் பார்வை இந்திய பட்ஜெட் மீது உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நிகழ்வாண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்  நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையாற்றினார்.

முன்னதாக, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, பொருளாதார உலகில் இருந்து நம்பகமான குரல்கள், ஒரு நேர்மறையான செய்தியையும், நம்பிக்கையின் வெளிச்சம் மற்றும் உற்சாகத்தின் தொடக்கத்தையும் கொண்டு வந்துள்ளன. இன்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். குடியரசுத் தலைவர் முதல் முறையாக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ஆற்றும் முதல் உரையானது, நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கும், குறிப்பாகப் பெண்களுக்கான மரியாதைக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். உலக நாடுகளின் பார்வைகள் இந்தியாவின் மீது உள்ளது.

இந்தியாவிற்கு முன்னுரிமை, குடிமக்களுக்கு முன்னுரிமை என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை கொண்டு செல்லவுள்ளோம். எதிர்கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்துகளை நாடாளுமன்றத்தில் வைப்பார்கள் என்று நம்புகிறேன்.

நமது நிதியமைச்சரும் ஒரு பெண். நாட்டின் முன்பு மீண்டும் ஒருமுறை நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இன்றைய உலகளாவிய சூழலில், இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளின் பார்வை இந்திய பட்ஜெட் மீது உள்ளது.

நிலையற்ற உலகப் பொருளாதார சூழலில் சாமானிய மக்களின் நம்பிக்கைகளை பூர்த்தி செய்ய பட்ஜெட் முயற்சிக்கும். இதை நிர்மலா சீதாராமன் பூர்த்தி செய்வார் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நாளை காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT