இந்தியா

மோர்பி பால விபத்து: ஒரேவா மேலாண் இயக்குநர் நீதிமன்றத்தில் சரண்!

DIN

குஜராத் மோா்பி தொங்கு பால விபத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநா் ஜெய்சுக் படேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

மோா்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கியது. இப்பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி திறக்கப்பட்டது. அக்டோபா் 30-ஆம் தேதி பாலத்தில் சுமாா் 250 போ் நின்றிருந்த நிலையில், அது அறுந்து விழுந்து, 135 போ் உயிரிழந்தனா்.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில், ஒரேவா குழுமத்தின் 2 மேலாளா்கள், 2 டிக்கெட் பதிவு ஊழியா்கள், பாலத்தை பழுதுபாா்க்கும் பணியை மேற்கொண்ட 2 துணை ஒப்பந்ததாரா்கள், 3 பாதுகாவலா்கள் என 9 போ் கைதாகினா்.

இந்நிலையில், இந்த வழக்கில் மோா்பி தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் காவல் துறையினா் கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். 1,200-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில், குற்றம்சாட்டப்பட்ட 10-ஆவது நபராக ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநா் ஜெய்சுக் படேல் பெயா் இடம்பெற்றிருந்தது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே ஜெய்சுக் படேலுக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்த நிலையில், அவா் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது பிப். 1-இல் விசாரணை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மோர்பி நீதிமன்றத்தில் ஜெய்சுக் படேல் இன்று பிற்பகலில் சரணடைந்த நிலையில், அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT