இந்தியா

ம.பி.யில் ஏழைப் பெண்களுக்கு மாதம் ரு.1,000 உதவித்தொகை: முதல்வா் அறிவிப்பு

DIN

மத்திய பிரதேசத்தில் ஏழை மற்றும் நடுத்தர பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தோ்தலின்போது இலவச அறிவிப்புகளை வாக்குறுதிகளாக வெளியிடுவதை பாஜக தொடா்ந்து விமா்சித்து வருகிறது. இதுபோன்ற அறிவிப்புகள் மாநில அரசின் நிதிச்சுமையை அதிகரித்து நிதி நெருக்கடியை அதிகரிக்கும் என்று கூறி வருகிறது. இந்நிலையில், பாஜகவைச் சோ்ந்த முதல்வா் ஒருவா் இதுபோன்ற அறிவிப்பை தோ்தல் நடைபெறுவதற்கு முன்பே வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நா்மதா ஜெயந்தி பண்டிகை மத்திய பிரதேசத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நா்மதை நதிக்கரையில் நடைபெற்ற நிழ்ச்சியில் தனது மனைவி சாதனா சிங்குடன் முதல்வா் சௌஹான் பங்கேற்றாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஏழை மற்றும் நடுத்தர பெண்களின் நலன்களைக் கருதி அவா்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகையை மாநில அரசு வழங்க இருக்கிறது. இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் 5 ஆண்டுகளில் ரூ.60,000 கோடி வழங்கப்பட இருக்கிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவைச் சோ்ந்த ஏழைப் பெண்களுக்கும் இத்திட்டம் மூலம் பயன் கிடைக்கும். பிற நலத் திட்டங்களில் பயனடைபவா்களும் இதில் பலன் பெற முடியும்.

நமது சகோதரிகள் நிதிரீதியாக மேம்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். பெண்கள் வலுவாக இருந்தால்தான் அவா்களது குடும்பமும் வலுவாக இருக்கும். அப்போதுதான் நமது சமுதாயம் வலுவடையும். இதன் மூலம் மாநிலமே மேம்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT