இந்தியா

2 சிறுநீரகங்களை பறிகொடுத்த பெண்ணுக்கு கணவர் செய்த துயரம்

DIN

பாட்னா: பிகார் மாநிலம் முஸாஃபர்நகர் பகுதியில், கருப்பை அறுவை சிகிச்சைக்குச் சென்ற பெண்ணின் இரண்டு சிறுநீரகங்களும் தனியார் மருத்துவமனையில் திருடப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குழந்தைகளையும் அவரது கணவர் கைவிட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது இரண்டு சிறுநீரகங்களும் திருடப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வாழ்ந்து வரும் சுனிதா தேவிக்கு அடுத்த பேரிடியாக, அவரது கணவரும் கைவிட்டுவிட்டு சென்றுவிட்டார்.

முஸாஃபர்நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கும் 38 வயது சுனிதா தேவி, டயாலிசிஸ் செய்தே உயிர் பிழைக்க வேண்டிய நிலையில், தனது மூன்று குழந்தைகளை கையில் ஏந்திக் கொண்டு எதிர்காலம் பற்றி தெரியாமல் கண்ணீர் சிந்துகிறார்.

கடந்த வாரம் கணவருக்கும் - மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், கணவர் சுனிதாவை அடித்துவிட்டு, குழந்தைகளையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு சென்றுவிட்டுள்ளார். பிள்ளைகளை தன்னிடம் விட்டுவிட்டு, இனி நீ உயிரோடு இருக்கிறாயா? இல்லையா? என்று நான் கவலைப்படப்போவதில்லை என்று கூறிவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

ஏற்கனவே நகரமாகிவிட்ட தனது வாழ்க்கையில் இது பேரிடியாக இருப்பதாகவும், தான் உயிரோடு இருப்பேனா இருக்க மாட்டேனா என்பதே தெரியவில்லை. அதில் எப்படி இந்த மூன்று குழந்தைகளைப் பராமரிக்க முடியும் என்றும் கவலையோடு கேட்கிறார்.

மருத்துவமனை தரப்பிலோ, நோயாளியின் உடல்நிலை குறித்து மட்டுமே தாங்கள் கவனம் செலுத்த முடியும். அவர்களது சொந்த வாழ்க்கை குறித்து எங்களால் எதுவும் செய்ய முடியாது எனறு கைவிரித்துவிட்டார்.

நுரையீரல் தானமாகக் கிடைக்கும்வரை அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் டயாலிசிஸ் செய்துகொண்டேதான் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

தனியார் மருத்துவமனையில் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுனிதா தேவிக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உடனடியாக வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதுதான், கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின்போது, அவரது இரண்டு சிறுநீரகங்களும் அவருக்குத் தெரியாமலேயே திருடப்பட்ட சம்பவம் தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT