இந்தியா

மும்பை - அகமதாபாத் வந்தேபாரத் ரயில் பாதைக்கு வேலி போடும் ரயில்வே

DIN

மும்பை - அகமதாபாத் இடையேயான வந்தேபாரத் ரயில் பாதை தொடங்கப்பட்டு ஏராளமான பயணிகளை ஈர்த்துள்ள நிலையில், ரயில் பாதை முழுவதும் வேலி அமைக்கும் பணியை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

அதிவிரைவு ரயிலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் ஆரம்ப காலத்தில் மாடுகள் முட்டியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செய்திகளில் அடிபட்டது.

மும்பை - அகமதாபாத் இடையே 622 கிலோ மீட்டர் தொலைவுள்ள வந்தே பாரத் ரயில் மிக முக்கியமான வழித்தடமாகும். இதேப் பாதையில் ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விரைவில் புல்லட் ரயில் இயக்கப்படவிருக்கிறது.

அதுவரை, வந்தேபாரத் ரயில் சேவை மிக முக்கிய போக்குவரத்து வசதியாக அமைந்திருக்கும். இந்த ரயில், பெரும்பாலும் திறந்த வெளிப் பகுதிகள் வழியாகவே இயக்கப்படுகிறது. குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் பல்வேறு இடங்களில், வந்தே பாரத் ரயில் மீது மாடுகள் முட்டிய சம்பவம் அவ்வப்போது நடப்பதால், அதனைத் தடுக்கும் வகையில், வேலி அமைக்கும் பணியை ரயில்வே உருவாக்கி வருகிறது.

இப்பணியை மேற்கொள்ள 8 நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்டு, இதற்காக ரூ.245 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT