இந்தியா

பனிமழைக்கு இடையே.. நடைப்பயண முகாமில் தேசியக் கொடியேற்றினார் ராகுல் காந்தி

PTI

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பந்தா செளக் பகுதியில் ராகுல் காந்தி தேசியக் கொடி ஏற்றினாா். 

நடைப்பயணத்தில் பங்கேற்ற பலர் முன்னிலையில், நடைப்பயணம் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 

தேசியக் கொடி ஏற்றிவைத்துப் பேசிய ராகுல் காந்தி, செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த 136 நாள்களாக, தனது நடைப்பயணத்தின் போது தங்களது அன்பையும் ஆதரவையும் அளித்தவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சி நிறைவுபெற்றதும், நடைப்பயணத்தில் தன்னுடன் இணைந்து கொண்ட சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவுடன் அவர் பனிக்கட்டிகளை வீசி எறிந்து செல்ல சண்டையில் ஈடுபட்டார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை, ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பா் 7-இல் தொடக்கினாா். கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஹரியாணா, தில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக, ஜம்மு-காஷ்மீரை இந்த நடைப்பயணம் அண்மையில் எட்டியது.

ஸ்ரீநகரின் புறநகா் பகுதியான பாந்தா செளக்கில் இருந்து ராகுல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது. இதில் திரளானோா் பங்கேற்று, ராகுலுடன் நடந்தனா். சோன்வாா் வரை 8 கி.மீ. தொலைவுக்கு வழிநெடுகிலும் உள்ளூா் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பல அடுக்கு பாதுகாப்புக்கு இடையே மக்களை நோக்கி கையசைத்தபடி ராகுல் நடந்து சென்றாா்.

சோன்வாரை அடைந்த பிறகு, ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவா்கள், எம்.ஏ.சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு காரில் சென்றனா். பின்னா், லால் செளக்கின் மணிக்கூண்டு பகுதிக்கு வந்தனா். அங்கு ராகுல் காந்தி தேசியக் கொடி ஏற்றினாா்.

சுமாா் 10 நிமிஷங்கள் நடைபெற்ற இந்த நிகழ்வையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு கி.மீ. சுற்றளவில் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகள், வா்த்தக நிறுவனங்கள், வாரச் சந்தைகளை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.

இன்றுடன் நிறைவுபெறும் நடைப்பயணம்
ராகுல் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம், ஸ்ரீநகரில் உள்ள எஸ்.கே.மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 23 எதிா்க்கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT