இந்தியா

மகாத்மா காந்தி நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி 

30th Jan 2023 09:06 AM

ADVERTISEMENT

புது தில்லி: மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,

"மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரை வணங்குகிறேன், அவருடைய ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன்.

இதையும் படிக்க | ​ அதானி குழுமத்தில் மேலும் ரூ.300 கோடிபங்குகளை வாங்குகிறது எல்ஐசி

ADVERTISEMENT

நமது தேசத்தின் சேவையில் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

அவர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது, மேலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக உழைக்க வேண்டும் என்ற நமது உறுதியை மேலும் வலுப்படுத்துவோம்" என்று மோடி கூறியுள்ளார். 

தேசப்பிதா மகாத்மா காந்தி, 1948 ஆம் ஆண்டு இதே நாளில் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT