இந்தியா

மார்ச் 9-ல் நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல்!

30th Jan 2023 04:37 PM

ADVERTISEMENT


நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல் மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராகவுள்ள வித்யா தேவி பண்டாரியின் பதவிக்காலம் மார்ச் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் குடியரசுத் தலைவராக அவர் பொறுப்பேற்றார். 

அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதைபொட்டி, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வது குறித்த தேர்தலுக்கான அறிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஆலோசனைக்குப் பிறகு இன்று (ஜன. 30) வெளியிட்டுள்ளது. 

அதன்படி, மார்ச் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் மார்ச் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT