இந்தியா

அயோத்தி 'ராமர் சிலை' எந்தக் கல்லில் செதுக்கப்படுகிறது தெரியுமா?

DIN

நேபாளத்தில் கிடைக்கும் ஷாலிகிராம் என்ற கற்களில் அயோத்தி கோயிலுக்கான ராமர் சிலை செதுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராமர் சிலையுடன் சீதையின் சிலையும் அதே கல்லில் செய்து, அயோத்தி ராமர் கோயில் மூல மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது. ஷாலிகிராம் என்ற கற்கள் நதிக்கரைகளில் மட்டுமே கிடைக்கும்.

உத்தரப் பிரதேச மாநில அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக் கோயில் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்து 2024 ஜனவரி மாதம் கோயில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கான மூலவர் சிலை நேபாள நாட்டின் ஷாலிகிராம் என்ற கற்களைக் கொண்டு செதுக்கப்படவுள்ளது. ராமர் சிலையுடன் கூடிய சீதையின் சிலைக்கும் நேபாள கற்களைக் கொண்டே செதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிலைகளை செய்யத் தேவையான ஷாலிகிராம் கற்களை ஜனவரி 30ஆம் தேதி அயோத்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

நேபாளத்தின் கலிகண்டகி நதியிலிருந்து கொண்டுவரப்படும் இந்த கற்கள், ஜனக்பூரிலுள்ள ஜானகி கோயிலுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன. ராமர் சிலைக்கு 23 டன் எடையும், சீதை சிலைக்கு 15 டன் எடையுடைய கற்களும் அனுப்பிவைக்கப்படவுள்ளன. கற்களை அயோத்தியில் கொண்டுசேர்க்கும் பணிகளை நேபாள அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT