இந்தியா

ஜம்மு-காஷ்மீர் வர பாஜக தலைவர்கள் அச்சம்: ராகுல் காந்தி பேச்சு

30th Jan 2023 06:04 PM

ADVERTISEMENT


ஸ்ரீநகர்: ஜம்மு - ஸ்ரீநகர் வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடந்து காட்டுவாரா என்று நேற்று சவால் விடுத்திருந்த நிலையில், காஷ்மீர் சாலைகளில் நடந்து செல்ல பாஜக தலைவர்கள் பயப்படுகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க.. சைக்கிளில் பணிக்கு வரும் காவல்துறை ஆய்வாளர் புஷ்பராணி: பலருக்கும் முன்மாதிரியாகிறார்

காஷ்மீரில் உள்ள சாலைகளில் பாஜக தலைவர்கள் நடந்து செல்ல முடியாது, காரணம், மக்களை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதற்காக அல்ல, அவர்கள் அது குறித்து பயப்படுகிறார்கள் என்பதால் என்று ராகுல் பேசியுள்ளார்.

ADVERTISEMENT

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு நிலைமை சீராக இருப்பது உண்மையென்றால், அமித் ஷா அல்லது வேறு எந்த பாஜக தலைவரும் ஜம்முவிலிருந்து லால் சௌக் வரை சாலையில் நடந்து செல்ல முடியுமா என்று ஞாயிற்றுக்கிழமை தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி சவால் விடுத்திருந்தார்.

இதையும் படிக்க.. 2 சிறுநீரகங்களை பறிகொடுத்த பெண்ணுக்கு கணவர் செய்த துயரம்

கொலை மற்றும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் ஜம்மு - காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கின்றன. பாதுகாப்பு நிலை மேம்பாடு அடைந்திருந்தால், பாதுகாப்புப் படை வீரர்கள் என்னிடம் பேசவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. இங்கு நிலைமை நன்றாக இருக்கறிது என்றால், பாஜகவினர் ஏன் ஜம்மு - லால் சௌக் வரை நடந்து செல்லக் கூடாது? இங்கு பாதுகாப்பு பலமாக இருக்கிறது என்றால் அமித் ஷா ஏன் நடந்து செல்லக் கூடாது. எனவே, அதுபோன்ற நிலை என்றே நினைக்கிறேன் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க.. மருத்துவக் காப்பீடு வைத்திருப்பவரா நீங்கள்? இதெல்லாம் தெரியுமா?

செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்திய ஒற்றுடை நடைப்பயணத்தின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, இங்கிருப்பவர்களின் வலியை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவால் புரிந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT