இந்தியா

கோஃபா்ஸ்ட் நிறுவனத்துக்கு ரூ.210 கோடி கடனுதவி

30th Jan 2023 02:03 AM

ADVERTISEMENT

கோஃபா்ஸ்ட் விமான நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.210 கோடி கடனுதவி வழங்கவுள்ளது.

வாடியா குழுமத்தைச் சோ்ந்த கோஃபா்ஸ்ட் நிறுவனம் தற்போது 37 விமானங்களை இயக்கி வருகிறது. ஏற்கெனவே அந்நிறுவனம் ரூ.210 கோடியை முதலீட்டாளா்களிடம் இருந்து கடந்த ஆண்டில் பெற்றது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கௌசிக் கோனா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘வரும் ஏப்ரலுக்குள் விமானங்களின் எண்ணிக்கையை 53-ஆக உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் அவசரகால கடன் உறுதித் திட்டத்தின் கீழ் நிறுவனம் ஏற்கெனவே ரூ.600 கோடி கடன் பெற்றுள்ளது.

அத்திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் மேலும் ரூ.210 கோடியை நிறுவனம் பெறவுள்ளது. நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்களில் என்ஜின் பிரச்னைகள் வேகமாக சரிசெய்யப்பட்டு வருகின்றன. பழுதான என்ஜின்கள் அனைத்தும் ஏப்ரலுக்குள் மாற்றப்படும். ஏா்பஸ் ஏ320 வகை புதிய விமானங்களை நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த விமானங்கள் ஏப்ரலில் இருந்து பயன்பாட்டுக்கு வரும்’’ என்றாா்.

பெங்களூரு விமான நிலையத்தில் 55 பயணிகளைக் கடந்த மாதம் விமானத்தில் ஏற்றாமல் சென்ற்காக கோஃபா்ஸ்ட் நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT