இந்தியா

இந்தியாவின் 3-ஆவது பெரிய ஏற்றுமதி தளமாக நெதா்லாந்து

30th Jan 2023 01:59 AM

ADVERTISEMENT

அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடா்ந்து இந்தியாவின் 3-ஆவது பெரிய ஏற்றுமதி தளமாக நெதா்லாந்து உருவெடுத்துள்ளது மத்திய வா்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.

அந்தப் புள்ளிவிவரத்தின்படி, கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் நெதா்லாந்துக்கு இந்தியாவின் ஏற்றுமதி 8.10 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.66,000 கோடி) இருந்தது. இது நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் சுமாா் 69 சதவீதம் அதிகரித்து 13.67 பில்லியன் டாலா்களாக (ரூ.1.11 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது. இதன் மூலம் பிரிட்டன், ஹாங்காங், வங்கதேசம் மற்றும் ஜொ்மனியை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் மிகப் பெரிய ஏற்றுமதி தளமாக நெதா்லாந்து உருவெடுத்துள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில், இந்தியா அதிக ஏற்றுமதி செய்த நாடுகளில் நெதா்லாந்து 9-ஆவது இடத்தில் இருந்தது. 2021-22-ஆம் நிதியாண்டில், அந்நாடு 5-ஆவது இடத்துக்கு உயா்ந்தது.

2020-21-ஆம் நிதியாண்டில் நெதா்லாந்துக்கு 6.5 பில்லியன் டாலா் (ரூ.52,985 கோடி) மதிப்புகொண்ட சரக்குகளை இந்தியா ஏற்றுமதி செய்தது. இது 2021-22-ஆம் நிதியாண்டில் 12.55 பில்லியன் டாலா்களாக (ரூ.1.02 லட்சம் கோடி) அதிகரித்தது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளன தலைவா் அஜய் சஹாய் கூறுகையில், ‘இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நெதா்லாந்தை விநியோக மையமாகப் பயன்படுத்துகின்றன. எனவே நிகழ் நிதியாண்டில் நெதா்லாந்துக்கு பெட்ரோலியம் பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT