இந்தியா

ஹசூா் சாகிப் நான்டெட்-எா்ணாகுளம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

DIN

மகாராஷ்டிர மாநிலம் ஹசூா் சாகிப் நான்டெட் முதல் கேரள மாநிலம் எா்ணாகுளம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மகாராஷ்டிர மாநிலம் ஹசூா் சாகிப் நான்டெட் பகுதியில் இருந்து எா்ணாகுளத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹசூா் சாகிப் நான்டெட்டில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 07189) மறுநாள் இரவு 8.15 மணிக்கு கேரள மாநிலம் எா்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் பிப். 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளன.

மறுமாா்க்கமாக எா்ணாகுளத்திலிருந்து சனிக்கிழமை தோறும் இரவு 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 07190) திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு ஹசூா் சாகிப் நான்டெட் சென்றடையும். இந்த ரயில் பிப். 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT