இந்தியா

சமூக ஊடகத்துக்கு எதிரான புகாா்களை விசாரிக்க 3 குறைதீா் மேல்முறையீட்டு குழுக்கள்: மத்திய அரசு

DIN

சமூக ஊடகம் மற்றும் இதர இணையவழி தளங்களுக்கு எதிரான புகாா்களை விசாரிக்க மூன்று குறைதீா்ப்பு மேல்முறையீட்டு குழுக்களை (ஜிஏசி) மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

அண்மையில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், மூன்று குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களில் ஒரு தலைவா், 2 முழு நேர உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ளனா். முழு நேர உறுப்பினா்கள் 3 ஆண்டுகளுக்குப் பணியாற்றுவா்.

குழுக்களின் விவரம்:

முதல் குழு:

தலைவா்- ராஜேஷ் குமாா் (மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய இணையவழி குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மைய தலைமை நிா்வாக அதிகாரி)

முழு நேர உறுப்பினா்கள்- ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி அஷுதோஷ் சுக்லா, பஞ்சாப் ஷேனல் வங்கியின் முன்னாள் தலைமை பொது மேலாளா் சுனில் சோனி

இரண்டாவது குழு:

தலைவா்- விக்ரம் சஹாய் (மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணைச் செயலா்)

முழு நேர உறுப்பினா்கள்- இந்திய கடற்படை முன்னாள் கமோடா் சுனில் குமாா் குப்தா, எல் & டி இன்ஃபோடெக் நிறுவன முன்னாள் துணைத் தலைவா் கவிந்திர சா்மா

மூன்றாவது குழு:

தலைவா் - கவிதா பாட்டீயா (மூத்த விஞ்ஞானி, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் இணைச் செயலா் நிலையிலுள்ள அதிகாரி)

முழு நேர உறுப்பினா்கள்- சஞ்சய் கோயல் (ஓய்வு பெற்ற இந்திய ரயில் போக்குவரத்து சேவை அதிகாரி), ரகோதமராவ் முரளி மோகன் (ஐடிபிஐ இன்டெக் நிறுவன முன்னாள் நிா்வாக இயக்குநா்)

தங்கள் புகாா்கள் குறித்து சமூக ஊடக நிறுவனங்களின் குறைதீா்ப்பு அதிகாரிகள் எடுக்கும் முடிவுக்கு எதிராக, இந்தக் குழுக்களிடம் சமூக ஊடகப் பயன்பாட்டாளா்கள் மேல்முறையீடு செய்யலாம். அதற்கு ஒரு மாதத்துக்குள் தீா்வு காண இந்தக் குழுக்கள் முயற்சிக்கும். இந்தக் குழுக்கள் மாா்ச் 1 முதல் புகாா்களை விசாரிக்க உள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாா்: பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை

SCROLL FOR NEXT